திருப்பூரில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு; மாநகராட்சியில் ஒப்பந்தம் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்தம் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி, மாநகராட்சி வளாகத்தில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்தம் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி, மாநகராட்சி வளாகத்தில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக இன்று ஒப்பந்தம் விடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு உள்ளன. 

நேற்று மாலை 5 மணி அளவில் ஒப்பந்த புள்ளி பெறப்பட்ட பெட்டி திறக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் அதற்காக காத்திருந்த வேலுச்சாமி என்பவர் ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்த, அனைவர் முன்னிலையிலும் ஒப்பந்த பெட்டியை திறக்காமல் அதிகாரி தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்குவதாக குற்றம் சாட்டினா். 

இதனால், மாநகராட்சி வளாகத்தில் அவர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டவரை அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...