கோவை: கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத் சேனா நிர்வாகி மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை: கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத் சேனா நிர்வாகி மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
கடந்த வாரம் கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, தகவலறிந்து வந்த பெரியார் ஆதரவாளர்கள் காவி சாயம் பூசிய நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடத்தினர்.
மேலும், குற்றவாளியை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், போத்தனூர் அண்ணாநகரை சேர்ந்த பாரத் சேனா பொறுப்பாளர் அருண்கிருஷ்ணன் (21) என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர், அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மாநகர காவல் ஆணையாளர், அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான உத்தரவு நகலை நேற்று மாலை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் மாநகர காவல் துறை வழங்கியுள்ளது.