கோவையில் பக்ரீத் விழாவின் போது அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - மாநகராட்சி துணை ஆணையர்

கோவை: பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் அனைவரும் மசூதிகளிலோ, தனிப்பட்ட இடங்களிலோ நடத்தப்படும் கூட்டு பிரார்த்தனைகளை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அறிவுறுத்தியுள்ளார்.

கோவை: பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் அனைவரும் மசூதிகளிலோ, தனிப்பட்ட இடங்களிலோ நடத்தப்படும் கூட்டு பிரார்த்தனைகளை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அறிவுறுத்தியுள்ளார்.



தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சி துணை ஆணையாளர்‌ தலைமையில் இஸ்லாமிய அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பக்ரீத் விழாவின் போது அனைவரும் முக கவசம், கையுறைகள் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி தெரிவித்தார்.

அதேபோல, மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இறைச்சி வெட்ட வேண்டும். அனுமதியற்ற இடங்களில் வெட்டக்கூடாது. முக்கியமாக இறைச்சிக்காக கன்றுக் குட்டிகளை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநகராட்சியால் வழங்கப்படும் விழா சம்பந்தமான அறிவுரைகளையும், விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

மேலும், பக்ரீத் பண்டிகையின் போது அதிகமாக வெளியே போவதையும், வருவதையும் கூட்டமாக கூடி இருப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்பினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...