பொள்ளாச்சியில் பொது இடங்களில் சுற்றித்திரிந்த கொரோனா உறுதி செய்யப்பட்ட மூன்று நகராட்சி ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்!

கோவை: பொள்ளாச்சியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட மூன்று நகராட்சி ஊழியர்கள் சுகாதாரத்துறையினர் வருவதற்குள் பொது இடங்களில் சுற்றித்திரிந்ததால் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை: பொள்ளாச்சியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட மூன்று நகராட்சி ஊழியர்கள் சுகாதாரத்துறையினர் வருவதற்குள் பொது இடங்களில் சுற்றித்திரிந்ததால் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி அலுவலக ஆணையர் உட்பட 12 பேர் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு 5 நாட்கள் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மற்ற நகராட்சி அலுவலர்கள் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 3 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், சுகாதாரத் துறையினர் அவர்களை அழைத்துச் செல்வதற்கு முன்பாகவே பொது இடங்களில் நடந்து வந்துள்ளனர். அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான பேருந்து நிலையம், உடுமலை சாலை வழியாக நடந்து அரசு மருத்துவமனையின் வளாகத்திற்குள் வந்தனர். இவர்கள் வருவதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதையடுத்து, பொள்ளாச்சியின் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி 3 நகராட்சி ஊழியர்கள் மீது தானாக முன்வந்து தனிமை படுத்ததிலிருந்து வெளியேறி நோய் பரப்பும் நோக்கத்திற்காக வந்ததாக புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...