திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 757 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய பாதிப்பில் காங்கேயம் பகுதியில் 5 பேருக்கும், உடுமலையில் 4 பேர், பல்லடம் பகுதியில் 2 பேர் என பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இன்று மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், கொரோனா சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமடைந்தனர். அதேபோல, 306 பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் இன்று 946 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனை செய்யப்பட்டதாகவும் 2912 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 330 பேர் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பை முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தை தொடர்ந்து, தற்போது திருப்பூரிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.