கோவை: ஒரு நாளைக்கு காலை 20 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதற்கே நமக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குகிறது என்கிறோம்.ஆனால், ஒரு நாளைக்கு 10 கிமீ சாய்வான, சருக்களான பாதையில், சிட்டு குருவி போல் பறந்து செல்கின்றனர் இங்குள்ள ஒரு மலைவாழ் மக்கள்.

நாகுரூத்துபதி மலை கிராமம்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைகாரன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது நாகுரூத்துபதி மலை கிராமம். ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குள் வரும் இப்பகுதியில் மகா மலசர் இனத்தை சேர்ந்த 46 குடும்பங்களில் என 200 பேர் வசித்து வருகின்றனர்.

70 டிகிரி சாய்வில், காண்டூர் கால்வாயை கடந்து மலை மீது அமைந்திருக்கும் இந்த கிராமம் இருப்பதே பலருக்கு தெரியாது.

ஆபத்து என்று தெரிந்தும் வேறு வழி இல்லாததால், குறுகிய இரண்டரை அடி அகலம் கொண்ட இரும்பு பாலத்தில் நடந்து செல்லும் இம்மக்ககளின் வாழ்கையே ஒரு திகில் தான்.
ஒரு நாள் பயணம்

இரண்டரை அடி அகலமும் 15 அடி நீளமுள்ள இரும்பு பாலத்தை கடந்து, இரு சக்கர வாகனத்தை செடிகளை கொண்டு மறைத்து வைத்து விட்டு, தங்களது ஊருக்கு செல்கிறார்கள், இங்குள்ள மலைவாழ் மக்கள்.
கரடு முரடான மலையில் செங்குத்தாக ஏறத் தொடங்கிய உடன் நமக்கு மேல் மூச்சு வாங்குகிறது, கால்கள் கடுக்கிறது, குறிப்பாக அந்த அடர்ந்த காட்டுப்பகுதி நெஞ்சை பதப்பதைக்க வைக்கிறது.
நிற்காமல், நடந்தால் ஒரு வழியாக 30 நிமிட நடை பயணத்தில் நாகுரூத்பதியை மலை கிராமத்தை அடைய முடியும்.

அங்கொன்றும், இங்கொன்றுமாக, வீடுகள், வெறும் 46 குடும்பங்கள், அந்த செங்குதான மலையில் குடிசைகளை அமைத்து வசித்து வருகின்றனர்.

மழை பெய்தால் வீட்டில் படுத்து உறங்க முடியாது, மண் சரிவு அதிகளவில் ஏற்படும் என பிரச்சனைகளை கூட இயல்பாகவே சொல்கின்றனர். மேலும், கீழும் என அவர்கள் வசிக்கும் மலையை ஏறி ஏறி அம்மக்கள் உடல் பருமன் இல்லாமல், நல்ல உடற்கட்டமைபுடன், ஆரோக்கியத்ததுடன் உள்ளனர்.
மேலும், கிராமத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், அவசர மருத்துவ வசதிக்கு பாதிக்கப்பட்டவரை தொட்டிலில் கட்டி தூக்கி செல்ல வேண்டிய அவலமான சூழலில் தான் வாழ்கின்றனர் இந்த மக்கள்.
இவர்கள் வயிற்று பிழைப்பிற்காக தங்களது குடிசைகள் அருகே சிறிய அளவில் விவசாயம் செய்தும், அவர்கள் கிராமத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மற்றும் கடலை தோட்டங்களை, வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 350 ரூபாய் வரை கூலி இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது, என தெரிவிக்கின்றனர்.
காட்டுக்குள் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று படிக்கும் குழந்தைகள்
புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உலாவும் பகுதியில், காடுகளுக்கிடையே சற்றும் பயம் இல்லாமல் சிரித்த முகத்துடன் இங்குள்ள குழந்தைகள் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று வேட்டைகாரன்புதூர் அருகே உள்ள மண்ணம் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

எம் ஜி ஆர் காலத்தில் இங்கு அமைக்கப்பட்ட சோலார் மின்விளக்குகள் தற்போது பழுதடைந்துள்ளதாகவும், அதனால் மாலை நேரங்களில் பிள்ளைகள் படிக்க மிகுந்த சிரமப்படுகின்றனர், என்று தெரிவிக்கின்றனர் அம்மக்கள்.
இதில், வேடிக்கை என்னவென்றால் மை பூசியது போல் அந்த இருட்டில் கூட, குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கச்சிதமாக மேடு பள்ளங்களை ஆராய்ந்து சரியான பாதையில் அசால்ட்டாக செல்கின்றனர்.
இது குறித்து, நாகுரூத்பதி மலை கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் நம்மிடம் பேசும் போது:
யானையை விரட்டவும், மட்டையை எடுக்கும் வேலைக்குதான் போகிறேன். ரேசன் அரிசியை வேட்டைகாரன் புதூரில் வாங்கி வண்டி வைத்து காண்டூர் கால்வாயிக்கு கொண்டு வந்து, பின்பு தோளில் தூக்கி வைத்து செங்குத்தான மலைப்பாதையில் ஏறி வீட்டுக்கு கொண்டு எப்படியோ சேர்த்து விடுவேன்.
என்னோட மூன்று குழந்தைகளும், பல கிலோ மீட்டர் கடந்து காட்டுப்பாதையில் சென்று படிக்கின்றனர். வாகன வசதி எல்லாம் எதுவும் இல்லைங்க...அரசு வசதி செய்து கொடுத்தால் மிக உதவியாக இருக்கும்.
ஒரு தடவை, மூன்றடி அகலம் மட்டுமே உள்ள காண்டூர் கால்வாயை கடந்து செல்லும் போது இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்து விட்டேன். எப்படியோ, அதிர்ஷ்ட வசமாக என் மகனும் நானும் மயிரிழையில் உயிர் தப்பித்தோம். ஆனால், என் இரு சக்கர வாகனம் கால்வாயில் அடித்து செல்லப்பட்டது, என தனது திகில் அனுபவத்தை நினைவு கூர்ந்தார், கதிர்வேல்.
சில நாட்களுக்கு முன்பு, தந்தை மகன் உள்ளிட்ட மூன்று பேர் காண்டூர் வாய்க்கலில் தவறி விழுந்து இறந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
15 ஆண்டுகள் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்துள்ளார், கதிர்வேல். இருந்தும், தனக்கு இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை, என வேதனையுடன் தெரிவித்தார்.
வனத்துறையினர் மலை வாழ் மக்களை யானை விரட்டவும், மின்சார வயர்களில் சிக்கியுள்ள மரங்களை வெட்டவும் பயன்படுத்துவதாகவும், ஆனால் அவர்களுக்கு பணி நிரந்தரம் எதும் செய்து தருவதில்லை என தெரிவித்தார்.
50 ஆயிரம் ரூபாய் இருந்தாலே காண்டூர் கால்வாய்க்கு பாலம் அகலப்படுத்தி விடலாம் என்கின்றனர் இந்த மகா மலசர் இன மக்கள்.
பெரிதாக நாட்டு நடப்பு எல்லாம் இவர்களுக்கு தெரியாது. இவர்கள் வாழும் வனம், அதை சார்ந்த மலைகள், வனவிலங்குகள் தான் இவர்களின் உலகம்.
எளிமையாக வாழும் இவர்கள் அரசிடம் வைக்கும் கோரிக்கைகளும் அப்படித் தான் உள்ளன.
பழுதடைந்துள்ள சோலார் விளக்குகள் மீண்டும் ஏறிய வேண்டும்; எங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வர காண்டூர் கால்வாயை அகலப்படுத்த வேண்டும், எங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல வனத்துறையில் ஒரு வேலை வேண்டும் என்பதே மகா மலசர் இன மக்களின் கனவாக உள்ளது.