கோவை: மகாராஷ்டிராவில் இருந்து போலி இபாஸ் மூலம் கோவைக்கு வந்த சொகுசு பேருந்தை சிறைபிடித்த போலீசார், மதுரைக்கு இபாஸ் வாங்கிக்கொண்டு கோவையில் இறங்கிய பயணிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: மகாராஷ்டிராவில் இருந்து போலி இபாஸ் மூலம் கோவைக்கு வந்த சொகுசு பேருந்தை சிறைபிடித்த போலீசார், மதுரைக்கு இபாஸ் வாங்கிக்கொண்டு கோவையில் இறங்கிய பயணிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாநில, மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இரவு, பகலாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை மஹாராஷ்டிரவில் இருந்து 25 பயணிகளுடன் நுழைந்த தனியார் பேருந்தை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பேருந்தின் இ-பாஸை வாங்கி சோதனை செய்த போது, மகாராஷ்டிரா முதல் மதுரை வரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இங்குள்ள மாவட்ட நிர்வாகத்திடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள படாமல் பயணிகளை நிலம்பூர் பகுதியில் இறக்கி விட்டுள்ளனர். பல மாநிலங்களை கடந்து இந்த சொகுசுப்பேருந்து எப்படி கோவை வந்தது எனவும் போலி இ-பாஸ் பெற்றது எப்படி ? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இபாஸ் கிடைக்காத மாவட்டங்களை தவிர்த்து பக்கத்து மாவட்டங்களுக்கு அனுமதி வாங்கி கொண்டு பயணிகள் வரக்கூடிய இடத்திற்கு இறக்கிவிடப்பட்டு வருவதாக சொகுசு பேருந்துகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.