கோவை: கோவை சூலூர் அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சூலூர் அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாசாணம் (33). இவரும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரும் நண்பர்கள். கடந்த 15 நாட்களுக்கு முன் சக்திவேல் மாசாணத்திடம் இருந்த 3500 ரூபாய் பணம் மற்றும் இரண்டு மதுபாட்டில்களை எடுத்து சென்றுள்ளார். இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சூலூர் அசோசியேசன் பெட்ரோல் பங்க் அருகில் சக்திவேல் தனது மனைவியுடன் இருந்த போது தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் தனது நண்பரான தட்சணாமூர்த்தியுடன் மாசாணம் வீட்டிற்கு சென்று, இரும்பு கம்பி கொண்டு தலை மற்றும் மார்பு பகுதிகளில் தாக்கியதில் மாசாணம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மாசாணன் வீட்டில் இருந்து வெளியே வராததின் காரணமாக அவரது தந்தை சென்று பார்த்த போது மகன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதையடுத்து, சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த சூலூர் போலீசார் மாசாணனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து மாசாணனை கொலை செய்துவிட்டு தப்பிய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், சக்திவேல் மற்றும் தட்சணாமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக நண்பரை குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.