இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு!

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி திரைப்பட உலகை ஆதிக்க சக்திகள் ஆட்டி படைப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்துவது போல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனக்கு வரவேண்டிய இந்தி சினிமா வாய்ப்புகள் தடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். திட்டமிட்டு ஒரு கும்பல் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.

எல்லைகளில்லா இசையை, எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...