கோவை: கோவை மாவட்டத்திற்குள் முறையாக இ-பாஸ் வாங்காமல் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களை இருந்து வந்த தொழிலாளர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை மாவட்டம் அழைக்கப்படுகிறது. கோவையில் சுமார் 1.5 லட்சம் தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், பவுண்டரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு உற்பத்தி பொருட்கள் அனுப்பி வைக்ககப்படுகின்றன.
இங்குள்ள நிறுவனங்களில் ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் முதல் தொழிற்சாலைகள், பவுண்டரிகள் மீண்டும் இயங்க விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பல தொழிற்சாலைகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், வட மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வர தொழில்நிறுவனங்கள் தீவிரம் காட்டின. ஆனால், பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர கடும் விதிமுறைகள் உள்ளதால் தொழில்நிறுவனங்களால் பெரும்பாலான தொழிலாளர்களை அழைத்துவர முடியாத நிலை நீடித்து வருகிறது.
இதனிடையே, சில தொழிலாளர்கள் கேரள மாநிலத்திற்கு வேலைக்கு வருவதாக ஏமாற்றி, அந்த மாநில இ-பாஸ் பெற்று கோவைக்குள் வந்து விடுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, இ-பாஸ் இன்றி தொழிலாளர்களை அழைத்து வரும் தொழில்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி எச்சரித்திருந்தார்.
இதையடுத்து, கோவை தொழில்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் இ-பாஸ் இன்றி பணிபுரியும் தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்:
"தொழில் நிறுவனங்களில் இ-பாஸ் இன்றி வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இ-பாஸ் இன்றி பணி புரியும் தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார்.