கருப்பர் கூட்டத்தை சேர்ந்த இருவர் மற்றும் ஹிந்து பேரவையை சேர்ந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்ததாக கைதான கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மற்றும் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய ஹிந்து பேரவை என்ற அமைப்பை சேர்ந்த கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்ததாக கைதான கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மற்றும் நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய ஹிந்து பேரவை என்ற அமைப்பை சேர்ந்த கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் இருவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில், முருகக் கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமான வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அந்த யூடியூப் சேனலை தடை செய்து, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், சுரேந்திரன் மற்றும் சேந்தில்வாசன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும், கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன.

தற்போது, கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் மீதும் சென்னை காவல் துறை ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது, என தகவல் வெளியாகியுள்ளது. 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...