தொழில்நுட்ப வசதி இல்லாததால் பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை; தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மனு

கோவை: பகுதி வாரியாக ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கோவை: பகுதி வாரியாக ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் பரமசிவன் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். 

அதில், கோவை மாவட்டத்தில் வன கிராமங்களிலும், சமவெளிப் பகுதிகளில் ( ஊரக உள்ளாட்சி பகுதிகளில்) வாழுகின்ற மேல்நிலை கல்வி கற்கிற பழங்குடியின மாணவர்கள் பயன் பெறும் விதத்தில் பகுதி வாரியாக ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்திட நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஆன்லைன் கல்வி முறை கோவை மாவட்டத்தில் உள்ள எண்ணற்ற பழங்குடியின மாணவர்களுக்கு சென்றடையும் விதத்தில், அவர்கள் இருக்கும் பகுதிகளில் மின்சார வசதிகளோ, நவீன தொழில்நுட்ப வசதிகளோ, (தொலைக்காட்சி, ஆண்ட்ராய்டு மொபைல்) இல்லாமல் சுமார் 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தங்களுக்கான கல்வி கிடைக்காத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 

 

தற்போது நடைபெற்று கொண்டுள்ள இணையதள வழி கல்வி முறையால் பழங்குடியின மாணவர்கள் தங்களுக்கான கல்வி பெறமுடியாமல் போகும் நிலை உள்ளதாகவும், எனவே ஒவ்வொரு வனச்சரகம் வாரியாக உள்ள குடியிருப்புகளில் தற்போது மேல்நிலைக்கல்வி பயில்கிற மாணவர்களை கொண்டு, அவர்கள் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயே ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்திட உதவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார். 

மேலும், இம்மாணவர்களுக்கு காலை, மதியம் என சத்துணவு வழங்கிட வேண்டும் எனவும் சிறப்பு வகுப்புக்கு அழைத்து வர வாகன வசதிகளும் செய்து தர முதல்வர் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

சமவெளிப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் மேல்நிலை கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கும், பேரூராட்சி, ஊராட்சி வாரியாக அருகாமையில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்புக்களை நடத்திட உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

பழங்குடியின குடியிருப்புகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயிலுகின்ற மாணவர்களுக்கு, அவர்கள் வாழும் பகுதியிலேயே ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்திட உதவுவதோடு, அவர்களுக்கு சத்துணவையும் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு, பழங்குடியின மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் இம்மனுவின் நகலை மாவட்ட ஆட்சியரிடமும் அளித்துள்ளனர். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...