கோவை: கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை மற்றும் சுற்று பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று, பெரியநாயக்கன் பாளையத்தில் ஒரே நாளில் 62.4 மிமீ மழை பெய்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் உக்கடம், காந்திபுரம், கவுண்டம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு, துடியலூர், ஏர்போர்ட், வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம், சின்ன வெங்காயம், வாழை, தென்னை, தக்காளி, வெண்டைக்காய் போன்றவை காய் வகைகள் அதிக நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நேற்று பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் முழுவதும் நேற்று 106.3 மிமீ மழை பெய்துள்ளது. இதில் ஏர்போர்ட்டில் 1.4 மிமீ, பெரியநாயக்கன்பாளையம் 62.4 மிமீ, வேளாண்மை பல்கலைகழகம் 42.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.