கோவை: மேட்டுப்பாளையத்தில் கொரோனோ பாதித்த நோயாளிகளுக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலான படுக்கைகளை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சின்னராஜ் சொந்த செலவில் வழங்கினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு மாதகாலமாக கொரோனோ தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று முதல் ஜந்து பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் கொரோனோ தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தனித்தனியாக சென்டர்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் மூன்று மையங்கள் அமைத்து அதில் நோயாளிகளை கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் அங்கு தங்கவைக்கப்பட்டவர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் தனது சொந்த செலவில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பில் 50 படுக்கைகள் மெத்தைகளை கொரோனோ சிகிச்சை மையத்திற்கு இன்று வழங்கினார்.
மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் உள்ள கொரோனோ மையத்திற்கு இன்று நேரில் சென்ற எம்.எல்.ஏ சின்னராஜ், 50 படுக்கைகள், தலையணைகள் போன்ற உபகரணங்களை மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் முன்னிலையில் மருத்துவ நிர்வாகத்திடம் வழங்கினார்.