கோவையில் மேலும் ஒரு உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று - வெரைட்டி ஹால் காவல் நிலையம் மூடப்பட்டது!

கோவை: கோவையில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வெரைட்டி ஹால் காவல் நிலையம் மூடப்பட்டது.

கோவை: கோவையில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வெரைட்டி ஹால் காவல் நிலையம் மூடப்பட்டது.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல, காவல் பணியில் ஈடுபட்டு உள்ள காவலர்களும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதனிடையே, கோவையில் மதுக்கரை, போத்தனூர், துடியலூர் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காவல் நிலையங்கள் மூடப்பட்டு தற்காலிக இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் புகார் அளிக்க வருபவர்களின் புகார்களை பெற காவல் நிலையம் முன்பு டெண்ட் அமைக்கப்பட்டு புகார் மனுக்கள் பெறப்படுகிறது.

இந்நிலையில், கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் பணியாற்றும் 40 வயது மதிக்கத்தக்க உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் காந்திபுரம் காவலர் குடியிருப்பில் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, காவல் நிலையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

மேலும், காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அருகில் அய்யன்ன கவுண்டர் வீதியில் உள்ள மண்டபத்திற்கு காவல் நிலையம் மாற்றப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...