கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு அறிவுரை வழங்கிய மாநகராட்சி ஆணையர்!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ 23 மற்றும்‌ 24வது வார்டுக்குட்பட்ட அனைத்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கொரோனா விழிப்புணர்வுக்கான அறிவுரைகளை கூறி, நோய்‌ எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதற்கான ஆயுஷ்‌ குடிநீரை வழங்கினார்.

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ 23 மற்றும்‌ 24வது வார்டுக்குட்பட்ட அனைத்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கொரோனா விழிப்புணர்வுக்கான அறிவுரைகளை கூறி, நோய்‌ எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதற்கான ஆயுஷ்‌ குடிநீரை வழங்கினார்.



இதையடுத்து, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ 7வது வார்டுக்குட்பட்ட வடவள்ளி சாலை, இடையர்பாளையம்‌, கவுண்டம்பாளையம்‌, தடாகம்‌ சாலை பகுதிகளில்‌ தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வுக்கான அறிவுரைகளை கூறி, சிறப்பு கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ பார்வையிட்டார்.



பின்னர் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ 83வது வார்டுக்குட்பட்ட தெலுங்கு வீதி, கருப்ப கவுண்டர்‌ வீதி, இராஜ வீதி பகுதிகளில்‌ தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வுக்கான அறிவுரைகளை கூறி, சிறப்பு கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ பார்வையிட்டார்.



மேலும், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ 100வது வார்டுக்குட்பட்ட வெள்ளலூர்‌ மற்றும்‌ அதிவிரைவு படையினர் குடியிருப்பு பகுதிகளில்‌ சிறப்பு கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ பார்வையிட்டார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...