கோவையில் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 80 லட்சம் முககவசங்கள் வழங்க திட்டம்

கோவை: தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முககவசம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்கியது. இத்திட்டத்தில், கோவை மாவட்டத்தில் மட்டும் 10.14 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 முககவசம் விதம் மாவட்டம் முழுவதும் 80 லட்சம் முககவசங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முககவசம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்கியது. இத்திட்டத்தில், கோவை மாவட்டத்தில் மட்டும் 10.14 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 முககவசம் விதம் மாவட்டம் முழுவதும் 80 லட்சம் முககவசங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 600 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அரிசி அட்டைகள் 9 லட்சத்து 27 ஆயிரத்து 455 அட்டைகள் உள்ளன. கொரோனா காலத்தில் மக்கள் பயன்பெற பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்ல சமூக இடைவெளி விட்டு நிற்பதற்கு வசதியாக குறியீடும் ரேசன் கடைகள் முன் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முககவசம் வழங்கும் திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு முக கவசங்கள் வந்து சேரவில்லை.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள முககவசங்கள் இன்று இரவுக்குள் வந்துவிடும். நாளை முதல் ரேசன் கடைகளில் முககவசங்கள் வழங்கப்படும். 10 லட்சம் அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 முககவசம் விதம் 80 லட்சம் முககவசங்கள் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட உள்ளது,’’ என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...