திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.
திருப்பூரில் தெக்கலூர் மாரியம்மன் கோயிலின் மாரி வனப்பகுதியின் ஓரங்களில் பனை, அடர்வனம் உட்பட சுமார் 5000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வேண்டுகோளை ஏற்று கம்பிவேலி அமைத்து, தொட்டி அமைத்து சொட்டு நீர் பாசனம் அமைக்க ZF Wndpower நிர்வாகம் உதவியது.
அதேபோல, கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டதையடுத்து நிலத்தை சமன்படுத்த திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் உதவியது. இந்நிலையில், அனைத்து முயற்சிகளுக்கும் தொடர்ந்து பேருதவி செய்து வரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் IAS அவர்களும், மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் அவர்களும் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அந்த வனப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் பராமரிப்புகளை செய்ய உதவுவதாக ரூபன் சங்கர் ராஜ் தெரிவித்தார். தொடர்ந்து களத்தில் ZF ஸிரிராம், வெற்றிவேல், கோவில் நிர்வாக குழு சார்பில் நந்தகுமார், பொன்னுசாமி, மூர்த்தி மற்றும் குழுவினர், சுரேஷ்பாபு ஆகியோர் தொடர்ந்து பயணித்தனர்.
மேலும் கோவில் குழு, மாவட்ட நிர்வாகம், தெக்கலூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் களத்தில் இறங்கி பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது. திருப்பூர் ரோட்டரி சங்கத்தினர் நிலத்தை சமன்படுத்த, சீமைக்கருவேல அகற்ற பேருதவி செய்தனர்.