கோவை: கோவையில் இன்று பெய்த கனமழை காரணமாக வீரபாண்டி பிரிவு அருகே உள்ள கே.ஆர் நகர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சாலையை கடக்க முடியாமல் அவதியடைந்தனர்.
கோவை: கோவையில் இன்று பெய்த கனமழை காரணமாக வீரபாண்டி பிரிவு அருகே உள்ள கே.ஆர் நகர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சாலையை கடக்க முடியாமல் அவதியடைந்தனர்.
கோவை மாவட்டம் - உக்கடம், காந்திபுரம், கவுண்டம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு, துடியலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது.
இதனிடையே, மேட்டுப்பாளையம் சாலை வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டிக்கு செல்லும் சாலையில் கே.ஆர் நகர் அருகே உள்ள தரைபாலம் வெள்ள நீரால் மூழ்கியது.
இதனால், அச்சாலையை கடக்க முடியாமல் வாகன ஒட்டிகள் சுமார் அரை மணி நேரமாக காத்து கிடந்தனர். தரைபாலம் அடியில் செல்லும் கால்வாய் நீர், பவானி ஆற்று நீரில் சென்று சேர்கிறது.
மழை காலங்களில் முன்னெச்சரிக்கையாக வெள்ள நீர் தேகத்தை தவிர்ப்பதற்காக நம்பர் 4. வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட கால்வாயை முறையாக தூர்வார வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.