கோவை போத்தனூரில் பட்டபகலில் இரு சக்கர வாகனம் திருட்டு; சிசிடிவி வெளியீடு

கோவை போத்தனூர் சாலை எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. அப்படி, பரபரப்பாக இயங்கும் இந்த சாலையில் பட்டபகலில் இரு சக்கர  வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


கோவை: கோவை போத்தனூர் சாலை எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி.பரபரப்பாக இயங்கும் இந்த சாலையில் பட்டபகலில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

போத்தனூர் திருமறை நகர் பகுதியை சேர்ந்த சுபையர். இவர்,நேற்று மதியம் 12.28 மணியளவில் தனது இரு சக்கர ஹோண்டா டியோ (Honda Duo) இரு சக்கர வாகனத்தை ஒரு கடையின் முன்புசாவியுடன் நிறுத்தி உள்ளார். 

அப்போது அந்த வழியாக வந்த நபர் அவரிடம் அட்ரஸ் கேட்டுள்ளார். அவருக்கு பதில் அளித்துவிட்டு சுபையர் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க உள்ளே சென்றுள்ளார். 

பின்பு, கடையில் இருந்து திரும்பிய சுபையர் வந்து பார்த்த போது அவர் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் இல்லை என்பதால் அதிர்ச்சியடைந்தார்.தொடர்ந்து, போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அவர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ள காட்சிகள் சேகரித்தனர். அதில் தோளில் ஒரு பை, கையில் ஒரு பையுடன் ஒரு இளைஞர் இரு சக்கர வாகனம் அருகே நின்று கொண்டு இருப்பதும், கண் இமைக்கும் நேரத்தில் அவர் அந்த வாகனத்தை திருடி செல்வதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை 

போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...