கோவை: கோவை நல்லாம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை பொதுமக்களின் புகாரை அடுத்து துடியலூர் ஆய்வாளர் கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நான்கு லட்சத்து நான்காயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் சமூக இடைவெளியில் இன்றி ஊரடங்கு சமயத்தில் பணம் வைத்து ஒரு கும்பல் சீட்டு விளையாடுவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண் 100க்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அத்தகவல் துடியலூர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி சுந்தரத்திடம் தெரிவிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட துடியலூர் காவல் ஆய்வாளர் நல்லாம்பாளையம் பகுதியில் ஒரு அறையில் சமூக இடைவெளியின்றி பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 13 பேரை குண்டுகட்டாக கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து நான்கு லட்சத்து நான்காயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட 13 பேரும் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட13 பேரை கைது செய்த துடியலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து துடியலூர் ஆய்வாளர் கூறும்போது இதுபோன்று தங்கள் பகுதிகளில் நடக்கும் குற்றங்கள் குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணிற்கோ அல்லது துடியலூர் காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களில் விபரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.