கோவையில் கருப்பர் கூட்ட குழுவினரை கண்டித்து பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் முருகனின் அடையாளமான வேலை வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவை: கருப்பர் கூட்டம் என்ற பெயரில் செயல்பட்ட யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து கோவையில் நூதன முறையில் பெண் குழந்தைகள் வேலின் படத்தை வரைந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.


கோவை: கருப்பர் கூட்டம் என்ற பெயரில் செயல்பட்ட யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து கோவையில் நூதன முறையில் பெண் குழந்தைகள் வேலின் படத்தை வரைந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.



கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தது.

இதன் தொடர்ச்சியாக முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று அந்த யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அது நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, முருகனை இழிவுபடுத்தியதாக கூறப்படும் அந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன.

இந்தநிலையில் இன்று கருப்பர் கூட்ட யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் சாலையோர சுவர்களில் முருகனின் அடையாளமான வேலினை வரைந்து நூதன முறையில் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல அக்குழந்தைகள் இனி கந்தசஷ்டிகவசம் குறித்து அவதூறு பரப்பினால் நாங்கள் வீதியில் இறங்கி போராடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...