கோவை: மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த 48 வயது நபர் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறார்களின் ஆபாச படங்களை பகிர்வதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய அரசு வலைதளங்களுக்கு தடை விதித்து.
இதைத்தொடர்ந்து பதிவிறக்கம் செய்பவர்கள், பரிமாறுபவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறை முன் வந்தது. இப்படி தமிழகத்தில் தீவிரமாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இப்படியிருக்க நேற்று கோவையைச் சேர்ந்த ஒருவர், சிறார்களின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செட்டிபாளையம் அருகேயுள்ள மலுமிச்சம்பட்டி அம்பாள் நகரைச் சேர்ந்தவர் சுனில்குமார்(48). இவர் விமான நிலைய உணவகத்தில் பணியாற்றி வந்தார். சுனில்குமார் தடை செய்யப்பட்ட மற்றும் சிறார்களின் ஆபாசப் படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து வருவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மேற்கொண்ட விசாரணையில் குற்ற செயல் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, சுனில் குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் போக்சோ, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.