மானை வேட்டையாடுவதற்காக கள்ள துப்பாக்கியுடன் சுற்றிய 4 பேர் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

மேட்டுப்பாளையம்: ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்து நோய் பரவலை தடுத்து வருகிறோம். ஆனால் இந்த வேட்டைக்காரர்களின் பிடியில் இருந்து வனவிலங்குகளை யார் காப்பாற்றுவார்கள் என்று தெரியவில்லை.



மேட்டுப்பாளையம்: ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்து நோய் பரவலை தடுத்து வருகிறோம். ஆனால் இந்த வேட்டைக்காரர்களின் பிடியில் இருந்து வனவிலங்குகளை யார் காப்பாற்றுவார்கள் என்று தெரியவில்லை. 

ஊரடங்கு காலம் என்பதால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்காக வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்தில் பாலப்பட்டி வேடர் காலனி பகுதியில் கள்ளத்துப்பாக்கி, சுருக்கு கம்பி வைத்து மான் வேட்டையாடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த வனத்துறை ரோந்து அதிகாரிகள் ஓடந்துறை காப்புக்காட்டில் இருந்து நான்கு பேர், பிரதீப் என்பவரின் தோட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

அவர்களை சுற்றி வளைத்த வன அதிகாரிகள், உரிமம் பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் வனப்பகுதியில் கறிக்காக மான்களை சுட்டுக் கொன்று எடுத்து செல்வதற்காக முயன்றது தெரிய வந்ததுள்ளது. மான்கள் ஏதும் கிடைக்காததால் வனப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர். உரிமம் பெறாத துப்பாக்கி, சுருக்கு கயிறுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 40,000 கட்டணம் வசூலிக்கப்பட்டது. சிறுமுகை பகுதியில் யானைகளின் இறப்பும் இவர்களிடையே இருக்கிற நாட்டுத்துப்பாக்கியும் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தீவிர விசாரணை செய்ய வேண்டும் என  வனத்துறைக்கு வன ஆர்வலர்கள் கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...