கோவை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ. தி.மு.க) சார்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பில், நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும், கழகப் பணிகளை விரைவு படுத்தும் வகையிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சில மாவட்டங்களை கீழ்கண்டவாறு புதிய மாவட்ட கழகங்களாக பிரிக்கப்பட்டு, பின் வரும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கோவை மாவட்டத்தை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் கோவை மாநகர் மாவட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் கோவை மாநகர் மாவட்டத்திற்கு அம்மன் கே அர்சுணனும், புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு எஸ்.பி.வேலுமணியும், புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு பி ஆர் ஜி அருண்குமாரும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலரான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டுப்பாட்டில் 1. தொண்டாமுத்தூர், 2. கிணத்துக்கடவு, 3. பொள்ளாச்சி, 4. வால்பாறை, 5. சூலூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.
அதேபோல மற்ற இரண்டு மாவட்ட செயலர் கட்டுப்பாட்டிலும் தலா மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.