போக்சோ வழக்கு: பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் அவரது குடும்ப விபரங்களை பத்திரிக்கையில் வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரின் மீது குற்ற வழக்கு பதிவு

கோவை: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் அவரது குடும்ப விபரங்களை பத்திரிக்கையில் வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் அவரது குடும்ப விபரங்களை பத்திரிக்கையில் வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 13.07.2020 அன்று பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும்  வகையில் “செய்தி சாரல்” என்ற தினசரி நாளிதழில் 15.07.2020 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நெகமம் காவல் நிலையத்தில் 18.07.2020 அன்று புகார் அளித்தார், அந்த புகாரை மகிளா நீதிமன்றதிற்கு அனுப்பி அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட பத்திரிக்கை ஆசிரியரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து 22.07.2020 அன்று நெகமம் காவல் நிலைய குற்ற எண். 1026/2020 ச/பி  23(1)(4) of POCSO Act. 74 of JJ Act இன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இன்று, ஜூலை 25 ஆம் தேதி வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவரை கைது செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் அவரது அடையாளங்களை ரகசியமாக காக்கும் கடமை சமூகத்தில் யாவருக்கும் உரியது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...