கோவை: பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டு கூட்டம் 25-07-2020 தேதி அன்று காந்திபுரம் CPI(M) அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் பி.ஆர்.நடராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் MLA ஆறுமுகம் CPI(M) மாவட்டச் செயலாளர் V.இராமமூர்த்தி K.அஜய்குமார், UK.சிவஞானம், CPI கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் RA.கோவிந்தராஜ், சி.சிவசாமி மௌனசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1. கொரோனா நோய் தொற்றினாலும் அதனால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினாலும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களை மேலும் வஞ்சிக்கக்கூடிய வகையில் உணவு பொருள் உள்ளிட்டு பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கட்டுப்படுத்த கோரியும்.
2. படித்தவர்கள் முதல் கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்டு வேலையின்மை, சம்பளம் குறைப்பு, சம்பளம்யின்மை, தொழில் முடக்கம், சிறு வியாபாரம் பாதிப்பு உள்ளிட்ட நெருக்கடியில் சிக்கியுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் ரூ.7500 உடனே நிவாரணமாக வழங்கிட கோரியும்.
3. கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்கள் என உயர்த்திடவும், பேரூராட்சி பகுதிகள் வரை விரிவு படுத்திட கோரியும்
4. மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய மின்சார திட்டத்தினால் இரண்டு மாதங்களுக்கு ஓரு முறை வீடுகளுக்கு கிடைக்கும் 100 யூனிட் மின்சாரமும் விசைத்தறிக்கு கிடைக்கும் 750 யூனிட் மின்சாரமும் விவசாயத்திற்கு கிடைக்கும் இலவச மின்சாரம் ரத்தாகும். எனவே புதிய மின்திட்டத்தை மாநில அரசு ஏற்க கூடாது என வலியுறுத்தியும்
5. கொரோனா கால கொடுமையைவிட மோடி அரசின் பிற்போக்கு நடவடிக்கையின் காரணமாக நாட்டு மக்கள் பெரும் துன்பப்பட்டு நிற்கும் நிலையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு கோட்பாட்டில் மாத ஊதியம், நில வருமானம் சேர்த்து கணக்கிடுவது என்பது பெரும் பகுதியினர் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மோடி அரசின் கொடூர நடவடிக்கைகளை கண்டித்தும்.
6. இவ்வாறு மக்கள் பொருளாதார நெருக்கடி, தொழில் நெருக்கடி, வியாபாரமின்மை, விலைவாசி உயர்வு பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் மக்கள் மத்தியில் ஒற்றுமை சீர்குலைக்கக்கூடிய வகையில் சிலைகள், கோயில்களை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோத சக்திகளை கோவை மாவட்ட மக்கள் தனிமைப்படுத்திடவும், புறக்கணிக்கவும் இரு கட்சிகளின் கோவை மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.