கோவையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மது மற்றும் மாமிச கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்!

கோவை: கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மது மற்றும் மாமிச கடைகளில் மக்கள் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.

கோவை: கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மது மற்றும் மாமிச கடைகளில் மக்கள் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் 37 மணி நேர தளர்வுகளற்ற முழு ஊரடங்கை கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்தது.

ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற ஊரடங்கு அறிவித்து இருந்த நிலையில் கோவையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 37 மணி நேர வரையிலான ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. மேலும், மாநகரைப் பொருத்தவரை சில இடங்களில் மக்கள் தனிமனித இடைவெளி இல்லாத சூழல் இருந்தது.



அதேபோல, ஊரடங்கு அமல் காரணமாக வீடு திரும்ப வாகன ஓட்டிகள் அவசரம் காட்டியதால் திருச்சி சாலை, புலியகுளம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது. பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் அமல்படுத்தப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அடைக்கப்பட்டன.

இந்த நிலையில், ஒரு சில இடங்களில் திறந்து இருந்த கடைகளை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அடைக்குமாறு வலியுறுத்தி ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

முழு ஊரடங்கில் பால் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து சந்தைகள், மளிகை, இறைச்சி கடைகள், மதுபான கடைகள், காய்கறிகள் வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...