கோவையில் குடியிருப்பு பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் மர்ம நபர்கள் யார்..? கொள்ளையர்களா..? போலீசார் விசாரணை

கோவை: கோவையில் குடியிருப்பு பகுதியில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதே நாள் மற்றொரு நகர பகுதியிலும் அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதங்களுடன் வலம்வரும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் குடியிருப்பு பகுதியில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதே நாள் மற்றொரு நகர பகுதியிலும் அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதங்களுடன் வலம்வரும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இருகூர் அருகே உள்ள தீபம் நகர் பகுதியில் கடந்த 23ம் தேதி நள்ளிரவு சுமார் 7 நபர்கள் மேல் சட்டையின்றி கையில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் உலா வந்துள்ளனர். இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே நாள் பீளமேடு வார்டு எண் 38க்குட்பட்ட பாலகுரு கார்டன் பகுதியிலும் இதேபோல் 3 பேர் முகங்களில் துணிகள் அணிந்து, அரைகுறை ஆடையுடன் சுற்றும் வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



மேலும், பீளமேடு பகுதியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடைபெற்றுள்ளது. சிங்காநல்லூர் மற்றும் பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...