கறுப்பர் கூட்டத்தை வளர்த்தது ஸ்டாலின் போன்ற தலைவர்கள் தான் - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

கோவை: கறுப்பர் கூட்டத்தை வளர்த்தது ஸ்டாலின் போன்ற தலைவர்கள் தான் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: கறுப்பர் கூட்டத்தை வளர்த்தது ஸ்டாலின் போன்ற தலைவர்கள் தான் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் அம்பராம்பாளையம் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், முதற்கட்டமாக பணிகள் நிறைவு பெற்ற போடிபாளையம், இராசி செட்டிபாளையம், குளத்தூர் பகுதிகளில் குடிநீர் இணைப்பை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, புதுச்சேரியில் எம்.ஜிஆர் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக அனைத்து மதங்களை சார்ந்த இயக்கம் எனவும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு மதச்சாயம் பூசக் கூடாது எனவும் சாயம் பூசியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களின் நிலைப்பாடு என்றார்.

அதேபோல, திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று ஸ்டாலின் சொல்வது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் என்றும் கருப்பர் கூட்டத்தை வளர்த்து விட்டதே மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் தான் என குற்றம் சாட்டினார். மேலும் அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பது தான் அதிமுகவின் கொள்கை என அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர் தணிகைவேல், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல், குடிநீர் வழங்கல் துறை செயற் பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...