நீலகிரி: குன்னூர் சாமண்ணா பூங்கா அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மீன் மற்றும் கோழி கடைகளை மூட கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குன்னூர் நகராட்சியில் கடைகளுக்கு சென்று வரி வசூலிக்கும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியான நிலையி்ல், நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு உட்பட்ட மார்க்கெட் கடைகள் மற்றும் பேருந்து கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்த நிலையில், குன்னூர் சாமண்ணா பூங்கா அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மீன் மற்றும் கோழி கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாமல், மீன்கள் வாங்க கூட்டம் கூடுவதாலும், கடைக்காரர்கள் தண்ணீர் மற்றும் கிருமி நாசினி வைக்காததால் குன்னூர் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் கடைகளை மூட உத்தரவிட்டார்.