போதிய மருத்துவ வசதி இல்லாமல் அவதிப்படும் கோவை வனத்துறை..! அரசுக்கு வலுக்கும் கோரிக்கை

கோவை: உலகில் வாழும் அனைத்து உயிர்களும் விலைமதிப்பற்றது. அது மனிதனாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி அனைத்துக்கும் பொதுவானது. எந்த ஒரு உயிரினங்களுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்துவிட்டால் காப்பாற்றி விடலாம்.

கோவை: உலகில் வாழும் அனைத்து உயிர்களும் விலைமதிப்பற்றது. அது மனிதனாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி அனைத்துக்கும் பொதுவானது. எந்த ஒரு உயிரினங்களுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்துவிட்டால் காப்பாற்றி விடலாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் யானை ஒன்று நோய்வாய்ப்பட்டு இருந்தது. அதற்கு உரிய மருத்துவம் அளித்து இருந்தால் காப்பாற்றி இருக்க முடியும். இது போன்று பல உயிரினங்களுக்கு வன கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் உயிரினங்கள் இறக்க நேரிடுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் வனத்துறை சார்ந்த மருத்துவர்களும், பணியாட்களும் உள்ளனர். ஒரு சிலர் விருப்பத்தின் பேரில் பணியாற்றுகிறார்கள். ஒரு சிலர் கட்டாயத்தின் பேரில் பணியாற்றுகிறார்கள்.

இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள கோவை மாநகரத்தில் யானை - மனித மோதல் என்பது நாளுக்கு நாள் பேசும் பொருளாக மாறிக்கொண்டே வருகிறது. இதனால் இரண்டு புறங்களிலுமே இழப்புகள் அதிகம். 1999 ஆண்டு முதல் 2018 வரை நடந்த யானை மனித மோதல்களில் 191 யானைகளும் 143 மனித உயிர்களும் பறிபோய் உள்ளது.

இதில் வனத்துறையில் போதிய வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இது குறித்து ஓசை அமைப்பின் காளிதாஸ் அவர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

வனத்துறை பொறுத்தவரை கால்நடை மருத்துவம் பயின்றவர்கள் தான் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். நீலகிரி, ஆனைமலை, கோவை ஆகிய வனப்பகுதிகளுக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கிறார். அடர்த்தியான காடுகளும், மலைப்பகுதியும் கொண்டது தான் கோவை. இங்கு நாளுக்கு நாள் மனித விலங்கு மோதல், யானைகள் இறப்பு, நோய்வாய்ப்படுதல், யானை வழித்தடத்தடங்கள் மறிப்பு போன்றவற்றால் யானைகள் இறப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது.

அதனால் கூடுதல் மருத்துவர்கள், ஆய்வகம், போன்றவற்றை செயல்படுத்தினால் நம் காட்டினை உருவாக்கும் உயிரினத்தை காப்பாற்றலாம். சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் யானை ஒன்று நோய்வாய்ப்பட்டு இருந்தது. அதற்கு உரிய மருத்துவம் அளித்து இருந்தால் காப்பாற்றி இருக்க முடியும்.

இது போன்று பல உயிரினங்களுக்கு வன கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வரவேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. மற்ற மாவட்டங்களில் உள்ள கோவில் யானைகளுக்கு சிகிச்சை அளிக்க இவர் மட்டும் தான் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. இது குறித்து அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் வைத்து வருகிறோம். விடப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புமாறு வலியுறுத்தி வருகிறோம்.

இது குறித்து வன மருத்துவர் சுகுமார் பேசுகையில், போதிய மருத்துவ வசதிகள் உரிய நேரத்தில் கிடைத்தால் எளிதில் உயிரினங்களை காப்பாற்ற முடியும். ஆனால், இங்கு ஆட்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். யானை இறப்போ அல்லது நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ அதற்கான ஆய்வக முடிவுகள் வருவது தாமதமாகிறது. அதனால் சிகிச்சை கொடுப்பதும் கடினமாகிறது. ஆய்வகம், அதற்கான பணியாட்கள், டெக்னீஷியன், ஆய்வக பணியாட்கள் இருந்தால் விரைவில் கண்டுபிடிக்க இயலும். இதை பற்றி அரசிடம் கோரிக்கைகள் வைத்து வருகிறோம் என்கிறார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...