திருப்பூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் பாமக சார்பில் அருந்ததிய பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி மரக்கன்று நட்டு கொண்டாடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும், பசுமை தாயகம் நாளை முன்னிட்டும் திருப்பூர் மாவட்ட வட்டாலபதி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார் தலைமையில் அரசு பள்ளியில் படிக்கும் அருந்ததியினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் உருவப்படம் பொறித்த டீசர்ட், முக கவசம் , நோட்டு புத்தகம் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும், இயற்கையை பாதுகாக்கவும் தற்போதுள்ள இயற்கை வளங்களை அப்படியே அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என இயற்கை உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டு சமூக இடைவெளியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் டாக்டர் அய்யா 81 என்று அவரது 81வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் பதாகைகளையும் உயர்த்திப் பிடித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் கிருத்திகா, முன்னாள் ஒன்றிய தலைவர் கொண்டப்பண், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் நாகலட்சுமி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.