கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் ஊரக பகுதிகளான காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது தென் மேற்கு பருவமழையானது தீவிரமாக பெய்து வருகிறது.

கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் மருதூர் ஊராட்சிக்குட்பட்ட புங்கம் பாளையம், மருதூர் கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமானது.

புங்கமபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பையன் நான்கரை ஏக்கரில் நேந்திரன் மற்றும் கதிலி வாழை விவசாயம் செய்து வந்துள்ளார். இதில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் அவரது தோட்டத்தில் மட்டுமே இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வாழைகள் வேரோடு சாய்ந்தது சேதமாகி உள்ளது.
குறிப்பாக, நன்கு வளர்ந்து காய்விட்டு பலன் தரக்கூடிய நிலையில் இருந்த வாழைகள் முழுவதும் சேதமாகியுள்ளது. வாழை ஒன்றிற்கு 120 ரூபாய் செலவு செய்து பாதுகாத்து வந்த பயிர் ஒரே நாளில் காற்றில் முறிந்து சேதமானதால் பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.