மேட்டுப்பாளையம் உதகை சாலையில் திடீரென தீ பிடித்து எரிந்த லாரி - ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு!

கோவை: மேட்டுப்பாளையம் உதகை மலைப்பாதையில் சாலையின் நடுவில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரியை தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

கோவை: மேட்டுப்பாளையம் உதகை மலைப்பாதையில் சாலையின் நடுவில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரியை தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சரக்கு ஏற்றி கொண்டு வந்த மினி கண்டெய்னர் லாரியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து சமையல் எண்ணெய் மற்றும் மாவுகளை ஏற்றி கொண்டு கோவைக்கு உதகை சாலை வழியாக வியாழக்கிழமை மினி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது, மேட்டுப்பாளையம் உதகை சாலையில் லாரி கல்லாறு அருகே இரண்டாவது கொண்டை ஊசி பகுதிக்கு வந்த போது லாரியின் முன்பகுதியில் திடீரென தீ பற்றியது. பின்னர் அந்த தீ மளமளவென லாரி முழுவதும் பற்றி எரியத் துவங்கியது.

இதையடுத்து, உடனடியாக சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் கீழே இறங்கி ஓடியதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.



இந்த தீ விபத்தில் லாரியுடன் சேர்த்து சமையல் எண்ணெய், சமையல் மாவுகள் என பல லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...