கோவை மற்றும் ஷார்ஜா இடையேயான அனைத்து சரக்கு விமான சேவை இரண்டாவது முறையாக ரத்து!

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் அனைத்து சரக்கு விமான சேவைகளும் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் அனைத்து சரக்கு விமான சேவைகளும் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது இந்தியா முழுவதும் சர்வதேச விமான சேவைகள் இயக்கப்படவில்லை. அதேசமயம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, சரக்கு விமான போக்குவரத்து பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி, கோவையில் இருந்து இதுவரை ஆறு சரக்கு விமான சேவை இயக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து சரக்கு சேவைகளை வழங்கிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தற்போது இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், சரக்கு விமானம் மற்றும் பயணிகள் விமானத்திலும், சரக்கு ஏற்றிச்செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் தற்போது வரை ஊரடங்கு காலத்திலும், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்கள் மூலம் கோவை மற்றும் ஷார்ஜா இடையே ஆறு முறை சரக்கு விமான சேவை இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 103 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்த வார இறுதி வரை ஏர் அரேபியா சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...