கோவையில் சரவணம்பட்டி மற்றும் செல்வபுரம் காவல்துறையினருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம்!

கோவை: கோவையில் சரவணம்பட்டி மற்றும் செல்வபுரம் காவல்துறையினருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வழங்கினர்.

கோவை: கோவையில் சரவணம்பட்டி மற்றும் செல்வபுரம் காவல்துறையினருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வழங்கினர்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் கொரோனா வைரஸ் காவலர்களையும் விட்டு வைக்கவில்லை.

கோவை மாவட்டத்தில் போத்தனூர், துடியலூர், சூலூர், உக்கடம், தொண்டாமுத்தூர், மதுக்கரை ஆகிய காவல் நிலையங்களில் பணியில் உள்ள காவலர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு காவல் நிலையங்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யும் சூழல் ஏற்பட்டது.



இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கோவை சரவணம்பட்டி மற்றும் செல்வபுரம் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



கோவை சரவணம்பட்டி, செல்வபுரம் காவல் நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கலந்து கொண்டு காவலர்களுக்கு முகக்கவசம், சாணிடைசர், கண்ணாடி, கையுறை, தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கினார்.

பின்னர் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் காவலர்களிடம் பேசுகையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பணியில் உள்ள காவலர்கள், முகக்கவசம், கையுறைகளை அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...