கல்லூரி மாணவர்களுக்கு பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு - முதலமைச்சர் உத்தரவு!

சென்னை: கல்லூரிகளில் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: கல்லூரிகளில் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், முதலமைச்சர் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் மாணாக்கர்களுக்கு பருவத் தேர்வில் இருந்து விலக்கு. 

முதல் மற்றும் 2ம் ஆண்டு, பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு. 

முதுகலைப் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்தப் பருவத்திற்கு தேர்வில் இருந்து விலக்கு. 

இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு. 

முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு. 

எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு. 

பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு விலக்கு தொடர்பான விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...