இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம், மூத்த தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தையும் கட்சியின் மூத்த தலைவர்களையும் சமூக வலைத்தளங்களில் வலதுசாரியினர் தொடர் அவதூறுகளையும் வன்மத்தையும் பரப்பி வருகின்றனர். இதனை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் இரண்டு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தையும் கட்சியின் மூத்த தலைவர்களையும் சமூக வலைத்தளங்களில் வலதுசாரியினர் தொடர் அவதூறுகளையும் வன்மத்தையும் பரப்பி வருகின்றனர். இதனை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் இரண்டு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆறுமுகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.ஜெயபாலன், கே.அஜய்குமார், கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர் மற்றும் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இதேபோல, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான ஜீவா இல்லம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன் மற்றும் சிவசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். பல்வேறு இடங்களில் திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...