சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



வாகனங்களுடன் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா கால கட்டத்தில் சுற்றுலா வாகன துறை முற்றிலும் முடங்கி இருக்கும் நிலையில், சாலை வரி வசூல் செய்வது மோசமான நடவடிக்கை என்று கூறி கைகளில் கோரிக்கை அட்டைகளுடன் தனி மனித இடைவெளி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதேபோல, கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்துள்ளதாக கூறிய அவர்கள், கொரோனாவால் தொற்று காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அனைத்து ஒட்டுனர்களுக்கும் கொரோனா கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். 



மேலும், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் செய்து தர வேண்டும் என்று தெரிவித்த அவர்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...