கோவையில் ஒரே நாளில் ஒரே காவல் நிலையத்தில் இருவேறு அவதூறு வலைதள பதிவிற்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு!

கோவை: பெரியாரை தனது முக நூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டிருந்த ஹேர்லைன்ஸ் நந்தா என்பவர் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அன்னூர் பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை: பெரியாரை தனது முக நூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டிருந்த ஹேர்லைன்ஸ் நந்தா என்பவர் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அன்னூர் பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பெரியாரிஸ்டுகளுக்கும், இந்துத்துவ கொள்கை கொண்டவர்களுக்கும் இடையே தொடர் மோதல் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து எழும் புகாரின் பேரில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்ற இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் கந்த சஷ்டியை குறித்தும் அவதூறாகப் பதிவிட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சண்முகநாதன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(a),295(a) மற்றும் 505(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பெரியாரை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட அதே பகுதியைச் சேர்ந்த இந்த அமைப்பு நிர்வாகி மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரியாரிஸ்டுகள் நேற்று அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் காலதாமதம் செய்ததாக, பெரியாரிஸ்டுகள் அன்னூர் காவல் நிலையம் முன்புறம் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அன்னூர் பகுதி கிளைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் ஹேர் லைன்ஸ் நந்தா என்ற பெயரில் முகநூலில் பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்டிருந்த அன்னூரைச் சேர்ந்த நந்தா என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(a),295(a),505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, கந்த சஷ்டி குறித்து சமூக வளைதளத்தில் அவதூறாக பதிவிட்டிருந்த பெரியாரியல் சிந்தனையாளர் மீதும், பெரியார் குறித்து அவதூறாகப் பதிவிட்டிருந்த இந்துத்துவ கொள்கையாளர் மீதும் ஒரே நாளில் ஒரே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...