திருப்பூர்: திருப்பூரில் 2 ஆண் குழந்தைகள் உட்பட இன்று 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 541 ஆக உயர்ந்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இன்று அவினாசி கஸ்தூரிபாய் நகரில் 7 வயது ஆண் குழந்தை, திருப்பூர் வைகால்மேடு அமராவதி நகரில் 6 வயதான ஆண் குழந்தை, திருப்பூர் ஏவிபி லே அவுட்டில் 3 பேர், கடைவீதி புது பாயில் பகுதியில் 3 பேர் உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றினை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமூக இடைவெளி மற்றும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு வகைகளில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூரில் இன்று புதிதாக 102 பேர் உட்பட 2823 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதோடு, இன்று மட்டும் 862 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும், 270 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறிய 613 பேரிடம் ரூ.69,600 அபராத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.