ஒரு பட்டாம் பூச்சியில் 67 வகை உருவ அமைப்புகள்..! இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பிடித்த அரசு ஊழியர்!

கோவை: எண்ணிலடங்கா பல்லுயுரி வளங்களை கொண்டது நம் மேற்கு தொடர்ச்சி மலை. இங்கு வாழும் உயிர்களால் மட்டுமே இம்மலை இதுவரை செழித்து இருக்கிறது.

கோவை: எண்ணிலடங்கா பல்லுயுரி வளங்களை கொண்டது நம் மேற்கு தொடர்ச்சி மலை. இங்கு வாழும் உயிர்களால் மட்டுமே இம்மலை இதுவரை செழித்து இருக்கிறது. 

இதில் யானைகள், புலிகள் என மற்ற விலங்குகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பறவைகளுக்கும் பட்டாம் பூச்சிகளுக்கும் கொடுக்கப்படுக்கிறது. பல மொழிகளையும் மதங்களையும் கடந்து ஒரு புள்ளியில் நிற்பது ஒரு இயற்கை வளத்தை காப்பாற்றுவதற்காக தான். பெரிய விலங்கினங்களை கூட புகைப்படம் எடுத்துவிடலாம் ஆனால் ஒரு பட்டாம் பூச்சியை படம் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு பொறுமையும், கூர்ந்த கவனிப்பும், அதற்கான செயலும் தேவை.

மழைக்காலத்திலும்,வறண்ட காலத்திலும் இயற்கையின் சமநிலைக்கு ஏற்றவாறு பட்டாம் பூச்சிகளின் உடலமைப்பு வேறுபடுகிறது. மழைக்காலத்தில் அதிக அடர் வண்ண கலரில் தெரியும் காமன் ஈவ்னிங் பிரவுன் (common evening brown) பட்டாம் பூச்சிய உருவ அமைப்பில் வறண்ட காலத்தில் பல வேறுபாடுகள் காணப்படும். 

இயற்கையை பொறுத்தவரை ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டு தான் காணப்படும் தவிர ஒரே மாதிரி இருக்காது. ஆனால், இவ்வகை பட்டாம் பூச்சியில் 67 வகையான உருவ அமைப்பு உள்ளது என்று ஆவணப்படுத்தி, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் -ல் இடம்பிடித்து உள்ளார் கோவை அரசு ஊழியரான தர்ஷன் திரிவேதி.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், எனக்கு சொந்த ஊர் குஜராத்தில் உள்ள அகமதாபாத். 2010லிருந்து புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். என் விட்டை சுற்றிலும் கட்டிடங்களாக இருப்பதால் புகைப்படம் எடுக்க 20 -30 கிலோமீட்டர் செல்வேன். அரசு பணி என்பதால் 2013ல் என்னை கோவைக்கு இடம் மாற்றம் செய்தார்கள். இப்பொழுது சாயிபாபா காலனியில் வசித்து வருகிறேன். மற்ற இடங்களை போல் அல்லாமல் மிகவும் அமைதியாக, பசுமை நிறைந்த இடமாக இருக்கிறது. அருகில் இருக்கும் வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி செல்வேன். ஒரு நாள் காமன் ஈவ்னிங் பிரவுனில் 10 விதமான உருவ அமைப்புகள் கொண்ட படம் பிடித்தேன்.

அதன் பின்னரே வறண்ட காலத்தில் அந்த பட்டாம் பூச்சிக்கு பல உருவ தோற்றங்கள் இருப்பது தெரிய வந்தது. அதை பின் தொடர்ந்து 2020க்குள் 67 வித உருவ அமைப்புகளை ஆவணப்படுத்தி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-க்கு அனுப்பி வைத்தேன். WWF, BNHS, TNBS, CNS ஆகிய அமைப்புகள் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் ஆவணங்களை உறுதிப்படுத்தி சான்று அளித்தார்கள். 

இந்த பட்டாம் பூச்சிக்கு இன்னும் பல உருவ அமைப்புகள் இருப்பதால் மேலும் ஆவணப்படுத்தி வருகிறேன். இப்புகைப்படங்கள் முழுவதும் கோவையில் மட்டுமே எடுக்கப்பட்டதாகும். ஒரு பட்டாம் பூச்சியில் இத்தனை உருவ அமைப்புகள் ஒரே இடத்தில் இருக்கும் எனில் இப்பகுதி பல்லுயுரி சூழ்நிலை மண்டலமாக தான் இருக்க முடியும். அரசாங்க பணி என்பதால் விடுமுறை நாட்களில் கோவை நேச்சுரல் சொசைட்டி (CNS) அமைப்பின் மூலம் வெளியே சென்று புகைப்படம் எடுத்து வருகிறேன். கோவைக்கு வந்து 7 வருடங்கள் ஆயிற்று. இங்குள்ள காலநிலை, சுற்றுப்புறச்சூழல் அனைத்துமே சொந்த ஊரில் இருப்பது போன்று உணர்கிறேன் என்கிறார்.

உருவ அமைப்பில் வேறுபாடு கொண்ட காமன் ஈவ்னிங் பிரவுன் பற்றி கோவை நேச்சுரல் சொசைட்டி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவேந்தன் அவர்களிடம் பேசினோம். இவ்வகை பட்டாம் பூச்சியில் மூன்று வகை உள்ளது. பகல் நேரங்களில் அதிகம் தென்படாது. மாலை நேரங்களில் மின்விளக்கு வெளிச்சத்தில் கவரப்பட்டு வெளியே வருகிறது. தற்காத்து கொள்ள மழைக்காலங்களில் பசுமை நிரம்பிய புற்கள், புதர்கள் நிறைந்த பகுதிகளில் காணப்படும். 

மேலும் வறண்ட காலத்தில் இறக்கைகள் அடர் வண்ண கலரில் இருப்பதால் அவை எளிதாக எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளும். அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் காய்ந்த இலை போன்று தனது உருவ அமைப்பை மாற்றி தற்காத்து கொள்கிறது. இந்த வகையை பற்றி இந்தியாவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆய்வறிக்கைகள் வெளியான பின்னரே உண்மையான தகவமைப்பு பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...