நிதி நெருக்கடி காரணமாக பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதில் தாமதம் - சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை: கொரோனா தொற்றால் தமிழக அரசு சந்தித்து வரும் நிதி பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்பட்ட உடன், தமிழக முதல்வருடன் பேசி பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை: கொரோனா தொற்றால் தமிழக அரசு சந்தித்து வரும் நிதி பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்பட்ட உடன், தமிழக முதல்வருடன் பேசி பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள கிட்ட சூராம்பாளையத்தில் 35 கோடி மதிப்பில் குடிசை மாற்று வாரியம் சார்பாக 4 ஏக்கர் பரப்பளவில் 512 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்த கட்டுமான பணியை, இன்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்:

தமிழகத்தில் மின்சார கட்டணம் எப்போதும் போல் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், நிதி வசூல் இல்லாமல் பொருளாதாரம் சூழ்நிலை மந்தம் ஏற்பட்டு அரசுக்கு சிக்கல் ஏற்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்து வருகிறார்.

இது போன்ற அசாதாரணமான சூழலில் கூட தமிழக அரசு நிதி பற்றாக்குறையை நிதானமாக கையாண்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் அடர்த்தியான மக்கள் தொகை இருந்தாலும், தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறாமல், கட்டுக்குள் தான் இருக்கிறது.

முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் பொது சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது,

கொரோனா தோற்று மற்றும் ஊரடங்கு போன்றவற்றால் தமிழக அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாகவே புதிய மாவட்டங்களை உருவாக்குவது நிறுத்திவைக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நிதி பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்பட்ட உடன் தமிழக முதல்வருடன் பேசி பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...