கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஆடி அமாவாசைக்காக முன்னோர்களுக்கு திதி கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஆடி அமாவாசைக்காக முன்னோர்களுக்கு திதி கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள நந்தவனம் என்ற இடம் காசிக்கு நிகராக கருதப்படுவதால் இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
குறிப்பாக ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் மற்றும் மேட்டுப்பாளையம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் என ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்க இங்கு வருகின்றனர்.
இந்நிலையில், அடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் தொடர்ந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு இங்கு திதி கொடுத்து வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக நந்தவனத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அரசங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதனால் ஆடி அமாவாசையான இன்று கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இங்கு தர்ப்பணம் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நந்தவனத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தடை செய்யப்பட்டுள்ளதாக அறவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு நந்தவன வளாகம் மூடப்பட்டுள்ளது.