கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 28,344 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை

கோவை: கடந்த மார்ச் முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 28 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தகவல்.

கோவை: கடந்த மார்ச் முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 28 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தகவல்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில்நிறுவனங்கள், வனிக வளாகங்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவைகள் நிபந்தனைகளுடன் இயங்கி வருகின்றன. இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் போன்றவற்றில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

"கோவை மாநகராட்சியில், இதுவரை கடந்த 17ம் தேதி நிலவரப்படி 28 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தகவல்", என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...