திருப்பூர்: கொரோனா தொற்றை மேலும் கட்டுப்படுத்த இ-பாஸ் வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து வெளியே செல்பவர்கள் ஆனாலும் அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து இங்கே வருபவர்கள் ஆனாலும் அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட்ட பின்னரே இ பாஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழ் நாட்டிலேயே முதல்முறையாக 42 செக்போஸ்ட்கள் அமைத்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைவரும், முறையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், மாநகராட்சி பகுதிகளிலும் அதற்குரிய அலுவலர்களை நியமித்து முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பூரை பொருத்தவரை இங்கே இருப்பவர்கள் யாருக்கும் பாதிப்பு கிடையாது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக மட்டுமே கொரோனா நோய் தொற்று பரவியுள்ளது என்றார்.
அதேபோல, திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நமது மாவட்டத்தில் 385 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட இதுவரை 170க்கும் மேற்பட்டோர் பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது உள்ளவர்களும் நலமுடன் இருக்கிறார்கள். மேலும் மாவட்டத்தில் தற்போது 2100 படுக்கை வசதிகளுடன் முகாம்கள் தயார்நிலையில் உள்ளது.
கொரோனோ தொற்றை மேலும் கட்டுப்படுத்த இ பாஸ் வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து வெளியே செல்பவர்கள் ஆனாலும் அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து இங்கே வருபவர்கள் ஆனாலும் அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட்ட பின்னரே இ பாஸ் வழங்கப்படும். தமிழகத்திலேயே முதல் முறையாக பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக உழைத்த அனைத்து ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களுக்கு இந்த மாவட்டத்தின் அமைச்சர் என்ற முறையில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும், வருகிற ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் புதிதாக 1.50 லட்சம் மகளிருக்கு விலையில்லா 4 வெள்ளாடுகள் வழங்கப்படும் எனவும் 12 ஆயிரம் மகளிருக்கு கறவை மாடுகளும், 1.50 லட்சம் மகளிர்க்கு 25 நாட்டு கோழிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என்றவர், இந்த ஆண்டு மட்டும் 3 லட்சத்து 12 ஆயிரம் மகளிருக்கு இந்த நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உள்ளது. அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.