பொள்ளாச்சி அருகே குடியிருப்புக்கு மத்தியில் உள்ள பால் கம்பெனியால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள பால் கம்பெனியால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள பால் கம்பெனியால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஒருவர் தனியார் மாட்டுப்பால் கம்பெனி நடத்தி வருகிறார்.



இந்நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குடியிருப்புகளுக்கு மத்தியில் தேங்குவதால் கொசு, மற்றும் விஷ ஜந்துக்கள் உற்பத்தியாவதுடன் கடும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படுவதாக அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் குரும்பபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



மேலும், பல்வேறு துறை அரசு அதிகாரிகள், சார்- ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...