திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 111 பள்ளிகள் முழு தேர்ச்சி..! மாநில அளவில் முதலிடம் பிடிக்க உழைத்த அனைவருக்கும் ஆட்சியர் வாழ்த்து!

திருப்பூர்: 12ம் வகுப்பில் , திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 111 பள்ளிகள் முழு தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும், மாநில அளவில் முதலிடம் பிடிக்க உழைத்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகள் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: 12ம் வகுப்பில் , திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 111 பள்ளிகள் முழு தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும், மாநில அளவில் முதலிடம் பிடிக்க உழைத்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகள் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்ச்சி முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. தேர்ச்சி முடிவுகளை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மாவட்டம் முழுவதும் 23398 பேர் தேர்வு எழுதினர். அதில் 10418 ஆண்கள் , 12980 பெண்கள் ஆவர். திருப்பூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 97.12% ஆக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடிக்க மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள் கூறிய மாவட்ட ஆட்சியர், மாவட்டம் முழுவதும் 111 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள நிலையில், வரும் காலங்களிலும் மேலும் உழைக்க அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...