கோவை: கோவை ஹோப்காலேஜ் மசகாளிபாளையம், லால்பகதூர் நகர் குடியிருப்பு பகுதியில், கணேஷ் சா பட்டு சேலைகள் விற்பனை செய்யும் தனியார் ஜவுளிக்கடை செயல்பட்டு வந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா விதிமுறைகளை மீறி அதிக வாடிக்கையாளர்களுடன் வியாபாரம் செய்து வந்தததாக அக்கடையின் மீது புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கு. ராஜாமணி உத்தரவின் பேரில் துணிக் கடையை ஆய்வு செய்த மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் கடையை பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர், அந்த கடை உரிமையாளர், ஊழியர்கள் உட்பட துணி எடுக்க வந்த பலருக்கு கொரோனா தொற்று நோய் பரவியது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், இந்த துணி கடையை வேறு இடத்துக்கு மாற்ற கோரி லால்பகதூர் நகர் மற்றும் பெரியார் நகர், பாலன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனு மீது அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அந்த துணிக்கடை செயல்பட்டு வந்த கட்டிடத்தில் சில முறைகேடுகள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் படி கடை உரிமையாளருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, தெரிவிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டிடம் மாநகராட்சியால் இடிக்கப்பட்டு அதற்கு உரிய செலவுகளை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.